Sunday, December 28, 2025

ஜி-ஐ-டி-பரீட்சை-2025

எனது டயரியிலிருந்து சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் 

ஆனால் தயவு செய்து வேறு வாட்சப் குரூப்களில் இதனைப் பகிர வேண்டாம்

உங்கள் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதில் தவறில்லை

 GIT பரீட்சை பற்றிய இந்த டயரிக் குறிப்புக்கு நீண்ட முற்பகுதி ஒன்றும் உள்ளது  

அது வெள்ள அனர்த்தத்திற்கு முன்னர் எழுதியது 

அதனை சில உயர் தர பிரிவு ஆசிரியர்களோடு  மட்டும் பகிர்ந்திருக்கிறேன்

 திகதி : டிசம்பர் 28, 2025 

டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த GIT பரீட்சை, வெள்ள அனர்த்தம் காரணமாக ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது

GIT  பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 

பரீட்சைக்குத் தயாராக ஒரு மாத காலத்திற்கு மேல் அவகாசம் கிடைக்கிறது.

டிசம்பர் 16-ஆம் தேதி நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

 16-ஆம் தேதி நானும் பாடசாலை சென்றேன்.

 GIT பரீட்சை  பற்றி நிர்வாகம் கண்டுகொள்ளாவிட்டாலும், அதனைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் மாணவர்கள் பலரும் என்னைத் தேடி வருவார்கள், விசேட வகுப்புகளை ஆரம்பிக்கச் சொல்வார்கள், சந்தேகங்களுக்கு விடை கேட்பார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பிலேயே சென்றேன்.

ஆனால் ஏமாற்றம்! 

ஒரு மாணவன் கூட என்னைத் தேடி வரவில்லை. 

இர்ஷானா டீச்சர் மட்டும், "கொமர்ஸ் பிரிவு மாணவர்களை அனுப்பி வைக்கவா?" என்று கேட்டார். 

"மாணவர்கள் விரும்பினால் மட்டும் அனுப்புங்கள், உங்கள் விருப்பத்திற்கு அனுப்ப வேண்டாம்" என்றேன்.

மாணவர்களிடமும் தேவை இருக்க வேண்டுமே! 

ஆனால் அவர்களும் வரவில்லை.

அதாவது அவர்களுக்கும் GIT பரீட்சையில் ஆர்வமில்லை

மூன்று Arts வகுப்புகள், ஒரு Commerce வகுப்பு, ஒரு Tech வகுப்பு என ஐந்து வகுப்புகளிலிருந்து ஒருவரும் வரவில்லை.

அந்த வாரமும் கழிந்தது.

இரண்டாவது வாரமாவது மாணவர்கள் வருவார்கள், நிர்வாகம் அது பற்றி என்னிடம் பேசும் என்றே நினைத்திருந்தேன். 

நிர்வாகம் எனும் போது உயர் தர பகுதித் தலைவர், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவி அதிபர், அதிபர் என யாருமே கேட்கவில்லை

ஒரு  வேளை விடுமுறைக்கு முன்னரே மாணவர்களுக்கு எட்மிஷன் வழங்கும் "சடங்கு" முடிந்து  விட்டதால் தங்கள் பொறுப்பு முடிந்து விட்டதாக அவர்கள் நினைத்திருக்கவும் கூடும் 

இரண்டாவது வாரமும் ஏமாற்றமே! 

ஆனால் Arts வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மட்டும் என்னைத் தேடி  வந்தார்கள். 

தவணைப் பரீட்சை வினாத்தாள்களை எடுத்துச் செல்லவே அவர்கள் வந்தார்கள்

அவர்களிடமும் GIT பரீட்சை பற்றிய எனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்தது கவலையான விடயமே

வந்த மாணவர்களும் மேலதிக வகுப்புகள் நடாத்த முடியுமா, பரீட்சைக்குத் தயார் செய்து விட முடியுமா என்றெல்லாம் என்னைக்  கேட்கவுமில்லை

அவர்களிடமும் பரீட்சைக்குத் தயாராக வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. 

'விடுமுறை காலத்தில் அருகிலுள்ள ஒரு பாடசாலைக்கு GIT 'செமினார் ஒன்றுக்குச் சென்றதாகச் சொன்னார்கள்

அந்த மாணவர்கள் அப்படி கேட்காமல் விட்டதற்கு, அவர்கள் பரீட்சைக்குத் எந்த நேரமும் தயாராக  இருப்பதாகவும் கருத முடியும்.

வந்த மாணவிகள் இருவரும் "விசேட வகுப்புகள் நடாத்துவது பற்றி மாணவர்களின் வாட்சப் குரூப்பில் நீங்கள் பதிவிட்டிருக்கலாமே சர்" என்று என்னைக் கேட்டார்கள் 

அதே கேள்வியை நானும் கேட்க முடியும்

நேரில் என்னை வந்து சந்திக்க நேரமில்லாத மாணவர்களும் வாட்சப் குரூப்பில் கேட்டிருக்கலாமே?

வாட்சப் குரூப் என்றால் அது உயிர்ப்புடன் (எக்டிவாக) இருக்க வேண்டும்

இது செய்தி சொல்லும் நியூஸ் குரூப் அல்ல

இது ஒரு லேர்னிங்க் குரூப் Learning Group

நான் குரூப்பில் பகிர்வதை மாணவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும்

அது பற்றி மேலும் கேள்விகள் கேட்க வேண்டும்

ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும் 

மாணவர்கள்  ரீயேக்ட் பண்ண வேண்டும்

அப்போதுதான் அசிரியருக்கு மேலும் மேலும் பாட குறிப்புகள் பதிவிட உற்சாகம் வரும்

நான் பதிவிடுவதை மாணவர்கள் கண்டு கொள்ளாத போது நான் எதற்கு பாடக் குறிப்புகள் தயார் செய்ய  என் நேரத்தை வீணாக செலவிட வேண்டும் ?

அதனால் இந்த குரூப்பில் பதிவிடுவதை நான் எப்போதோ நிறுத்திட்டேன்

"நிர்வாகம் கேட்கவில்லை, மாணவர்கள் கேட்கவில்லை எனச் சொல்கிறீர்கள் நீங்கள் போய் அவர்களிடம் கேட்டிருக்கலாமே ?"  என உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்

அந்தக் கேள்வியில்  நியாயம் இருக்கிறது 

ஆனால் இந்தப் பாடசாலையில் GIT  பாடத்தை 20 வருடங்களாகக் கற்பித்து வரும் எனக்கே  தெரியாமல், என்னைக் கண்டு கொள்ளாமல் (இதனை உங்களிடம் சொல்வதுகூட எனக்கு அவமானம்தான். இருந்தாலும் பரவாயில்லை) பரீட்சைக்கு தயார் செய்ய  விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்புகள் ஏற்பாடு செய்யாமல்  மாணவர்களுக்கு எட்மிஷனை வழங்கி வீட்டுக்கு அனுப்பியவர்களிடம் நான் எதற்குப் போய் கேட்க வேண்டும்?

எனக்கும் தன்மானம் என்று ஒன்றிருக்கிறதே?

அது என்னைத் தடுத்தது

அதனால் நான் அவர்களிடம் கேட்கவில்லை

இந்தப் பாடசாலைக்கு நேற்று வந்தவராக இருந்திருந்தால் தன்மானம்  எல்லாம் பார்க்காமல் போய்க் கேட்டிருக்க முடியும்

தன்மானம் என்பது இங்கே ஈகோ அல்ல, அது என் அனுபவத்திற்காக  தர வேண்டிய எனக்கான ஓர் அங்கீகாரம் ஒரு  மரியாதை

இருபது (20) வருடங்களாக GIT  பாடம் கற்பித்து வரும் ஒரே ஆசிரியர் இலங்கையிலேயே நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்

GIT  பரீட்சையில் அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சி பெற எனது வாழ்த்துகள் 

ஆனால் வாழ்த்துகளால் மட்டும் பரீட்சையில் சித்தி பெற முடியாது என்பதையும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் 

நன்றி

-அனூப்-

தயவு செய்து வேறு வாட்சப் குரூப்களில் இதனைப் பகிர வேண்டாம்




No comments:

Post a Comment

ஜி-ஐ-டி-பரீட்சை-2025

எனது டயரியிலிருந்து சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்  ஆனால் தயவு செய்து வேறு வாட்சப் குரூப்களில் இதனைப் பகிர வேண்டாம் உங்கள் பெற்...